இலங்கை கிரிக்கெட் போர்டின் அறிமுக டி20 லீக்கான “லங்கா பிரிமீயர் லீக்” ஆகஸ்ட் 28-ந்தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் ஆகஸ்ட் 30-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டி தொடர் பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானம், ராங்கிரி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானம், பலேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், சூரியவேவா மகிந்த ராஜபக்சே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கொழும்பு, கண்டி, காலே, தம்புல்லா மற்றும் ஜாஃப்னா ஆகிய ஐந்து நகரங்களின் பெயரில் அணிகள் களம் இறங்குகின்றன. இதில் 70-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் மற்றும் பிரபல பயிற்சியாளர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான போட்டி அட்டவணை சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்பான்சர் குறித்த ஏலம் வருகிற 30-ந்தேதி நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.