ஜீன்ஸ் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து பிரமாண்ட ஹிட் அடித்த படம். இப்படம் இந்தியா முழுவதுமே பிரமாண்ட வெற்றியை பெற்றது.
பிரஷாந்த் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படமாக இருந்தது. ஆனால், ஜீன்ஸ் படம் முதலில் அஜித்திற்கு வந்தது.
அஜித் பெப்சி ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்ததால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது.
அதை தொடர்ந்து அந்த வாய்ப்பு காதலன் படத்தில் நடித்த பிரபுதேவாவிற்கு சென்றுள்ளது.
அவராலும் இதில் நடிக்க முடியாமல் போக, பிறகு தான் அந்த வாய்ப்பு பிரஷாந்த் கதவை தட்டியுள்ளது.
ஜீன்ஸ் படத்தில் 7 அதிசயம், உலக அழகி ஹீரோயின் என பல சிறப்பம்சம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு தெலுங்கிலும் இப்படம் ஷங்கரின் மார்கெட்டை பல மடங்கு உயர்த்தியது கூடுதல் சிறப்பு.