தீபாவளிக்கு வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பவர்கள் நடிகர் சாந்தனுவும் ஒருவர். திறமை கொண்ட இவர் தன் வாழ்க்கையில் மாஸ்டர் படம் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
அண்மையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் சினிமாவில் திறமை இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது, வாரிசு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இசையமைப்பாளர் ரஹ்மான் தனக்கான வாய்ப்புகளை தடுக்க பாலிவுட் சினிமாவில் ஒரு கும்பல் செயல்படுகிறது என கருத்து தெரிவிக்க பலரும் இதுகுறித்து பேசத்தொடங்கினர்.
இந்நிலையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் தமிழ் திரையுலகில் நெப்போட்டிசம் இருக்கிறது என தெரியவில்லை. ஆனால் குருப்பிசம் இருக்கிறது. யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை யாரோ நிர்ணயிக்கிறார்கள். யார் நீங்கள்? என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
அதே வேலையில் நடிகர் சாந்தனு Nepotism இங்கும் இருக்கிறது. அதே குருப்பிசம் செய்யும் நபர்கள் தான் தம்முடன் யார் பணியாற்றவேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். தரத்தை பராமரிக்க வேண்டும் என்பதற்காக சிலரை ஆதரிக்கும் அவர்கள் மற்றவர்களை தங்களுடைய தரத்தை அதிகரித்துகொள்ள அனுமதிப்பதில்லை என கூறியுள்ளார்.
#Nepotism இங்கேயும் உள்ளது..
அதே குருபிசம் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்…
தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள் https://t.co/YVWbM2sFYj— Shanthnu ? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) July 28, 2020