சுஷாந்த் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!.. காதலி மீது பொலிசார் வழக்குபதிவு- வெளியான வீடியோ

பாலிவுட் நடிகரான மறைந்த சுஷாந்த் சிங்கின் காதலி உட்பட ஐந்து பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த யூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது இவரது மரணம், இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து மும்பை பொலிசார் தீவிர விசாரணையை தொடங்கினர், சுஷாந்த் சிங்குக்கு நெருக்கமானவர்கள், அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரிடம் விசாரணை நடந்தது.

குறிப்பாக கரண் ஜோஹர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, பிரபல இயக்குனராக மகேஷ் பட் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது.


இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தையான கே.கே.சிங், ரியா சக்ரபர்த்தி மீது பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அதில், தன் மகனின் நிதியை கட்டுப்படுத்தி சுமார் ரூ.15 கோடி வரை தன்னுடைய வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளதாகவும், சுஷாந்த்தின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குடும்பத்தினருக்கே தெரியாமல் கம்பெனியின் பங்குகளை நிர்வகித்து வரும் ரியா, அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சுஷாந்துக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே சுஷாந்த் வீட்டில் தடயவியல் அதிகாரிகள் சோதனை செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளன.