மதுபிரியர்களின் இந்த செயலால் விளையும் விபரீதங்கள்.!

தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவிற்கு அடிமையாகியுள்ளார். மது பழக்கத்தால் நாம் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமளையே பல குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மதுக்கடையை அரசாங்கமே நடத்திவருகிறது. ஒரு சிலருக்கு மது அருந்தவிட்டால் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடும். அந்த அளவிற்கு அடிமையாக்கியுள்ளது மது பழக்கம்.

ஒருதடவை தானே, ஜாலியா நண்பர்களுடன் இதை செய்யலாமே என ஆரம்பிப்பவர்கள் தான் இறுதியில் அதற்க்கு அடிமையாகிவிடுகின்றனர். மது உட்கொண்ட பிறகு மது அருந்துபவர்களை தனக்கு அடிமையாக்குகிறது.

மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்:

கல்லீரலில் பாதிப்பு: மது பழக்கம் கல்லீரலை வீங்கச் செய்யும். கல்லீரலை நிரந்தரமாக சேதம் அடைய செய்து உயிரிழக்க நேரிடும். அதிகமாக மது அருந்துவதால் மயக்கம் ஏற்படும். கண் விழிக்கும்போது தலைவலி ஏற்படும்.

மூளையைப் பாதித்து அதன் செயல்திறனைக் குறைக்கிறது. சொந்தமாக முடிவெடுக்கமுடியாமல், சுய கட்டுப்பாடு மற்றும் உடல் ஒத்துழைப்பு அனைத்தையும் பாதிக்கிறது.

மது அருந்துவது தான் விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணமாகிறது. மது அருந்துவதால் உடலில் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகிறது. இதனால் பசியின்மை ஏற்படுகிறது.