இளையராஜா பரபரப்பு புகார்.!!

பிரசாத் ஸ்டூடியோவில் தனது அறையில் இசைக்கருவிகள், இசை குறிப்பேடுகள் திருடு போனதாக கூறி இசைஞானி இளையராஜா புகார் அளித்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பான புகாரை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது இளையராஜா காவல் ஆணையரிடம் அளித்துள்ளார். மேலும், ஏறகனவே பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகிக்கும், இளையராஜாவிற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது இளையராஜா தனியாக ஸ்டூடியோ ஒன்றை அமைப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், இது போன்ற புகார் காவல் நிலையத்தில் அளித்திருப்பது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த சில வருடமாகவே இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ தரப்பினர் இடையே கடுமையான பிரச்சனைகள் திரைத்துறை வட்டாரத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய புகார் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.