ராகு, கேது பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் ராசி.!

ராகு – கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் திகதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் திகதியும் பெயர்ச்சியாகிறார். ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். இதனடிப்படையில் இன்று துலா ராசியினருக்கு ராகு – கேது பெயர்ச்சி எப்படி இருக்க போகின்றது என இங்கு பார்ப்போம்.

பலன்கள்:

இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்கிற புத்தியும், புதிய நம்பிக்கையும் ஏற்படும். எங்கு போனாலும் உங்களுக்கு நன்மையே நடக்கும். அந்தளவுக்கு பாதுகாப்பை இந்த பெயர்ச்சி தரும்.உங்கள் வாழ்வில் ஓடி ஓடி உழைத்து முன்னேற புதிய வாய்ப்பு வாசல்கதவைத் தட்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதால், நன்மையும் தாராள வருமானமும் கிடைக்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

திட்டமிட்ட திருமண நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றம் சிறப்பாக நிறைவேறும். பிள்ளைகள் செயல்திறனை வளர்த்து படிப்பு, பணி, தொழிலில் முன்னேற்றம் காண்பர். சொத்து வாங்க யோகம் வந்து சேரும்.பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர்.வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும்.

அவ்வப்போது ஏற்படும் தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள்.சங்கங்களில் சிலருக்கு பதவி பொறுப்பு கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து உழைத்தால் அனைத்து விதமான இனங்களிலும் வெற்றிகளைக் குவிப்பீர்கள்.மின்னணு சாதனங்கள் சார்ந்த வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அதிக லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.உத்தியோகஸ்தர்கள் தங்களது பணிகளை எளிதாக நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், பிற சலுகைகள் பெறுவர்.அனுபவசாலிகள் ஆலோசனையை ஏற்று நடப்பதால், பணியில் உயரிய பலன்களைபெறுவீர்கள். நிர்வாகத்தின்வழிகாட்டுதலை எளிதாக புரிந்து செயல்படுவது சிறந்தது. பணி இலக்கு திட்டமிட்ட காலத்தைவிட சீக்கிரம் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். உடன் உள்ளோர்கள் உங்கள் பணி சிறக்க உதவி புரிவர். எதிரியை வெல்லும் திறன் அறிவீர்கள்.கூடுதல் சொத்து கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மதிப்பைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு காண்பர்.

கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள்.சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள்.

ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள். மற்றபடி அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும்.மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

பரிகாரம்:

குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். தாமரையினால் பெருமாளுக்கு மாலை செய்து அர்ப்பணித்து வணங்க கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7, 9