கொத்திமல்லி சாப்பிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா??

தமிழர்கள் கொத்தமல்லியை பெரும்பாலான உணவுகளில் வாசனைக்காகவும், அதன் தனித்துவமான சுவைக்காகவும் பயன்படுத்துகின்றனர்.

கொத்தமல்லியில் சுவையும், மணமும் மட்டும் இல்லை அதைவிட எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் அதில் இருக்கிறது.

என்னதான் ஆரோக்கியமான நன்மைகளை வழங்கினாலும் அதிகளவு கொத்தமல்லியால் சில பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கொத்தமல்லியில் ஏற்படகூடிய பக்கவிளைவுகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொத்தமல்லியை எடுத்துக் கொள்வதை தடுப்பது நல்லது. இது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
  • சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கொத்தமல்லி அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அவர்களின் சர்க்கரை அளவில் பெரிய மாற்றம் ஏற்படும். இதனால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.
  • நிறைய கொத்தமல்லி சாப்பிடுவது இரத்த அழுத்தத்தில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்துமாம்.
  • இதற்கு காரணம் இதிலிருக்கும் பொட்டாசியம் ஆகும். இது உடலில் இருக்கும் சோடியத்தின் விளைவை குறைத்து விடும்.
  • இது உங்களின் ஒட்டுமொத்த இதயத்திற்கு நல்லது ஏனெனில் சோடியம் உங்களின் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துமாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ள போகிறவர்கள் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க வேண்டியது முக்கியம். சீரான இரத்த அழுத்தத்தை பராமரிக்க கொத்தமல்லியை குறைவாக சாப்பிட வேண்டும்.
  • கொத்தமல்லியை நீண்ட காலமோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுவது கல்லீரல் பிரச்சினைகளை ஏற்படுத்துமாம்.
  • கொத்தமல்லி விதைகளில் உள்ள எண்ணெய் கூறுகள் பொதுவாக கல்லீரல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன, ஆனால் அதன் அதிகப்படியான பயன்பாடு சுரப்புக்கு மேல் பித்தத்தை ஏற்படுத்தி அசாதாரண நிலைமைகளை ஏற்படுத்தி விடும்.
  • கர்ப்ப காலத்திலோ அல்லது பால் கொடுக்கும் காலத்திலோ கொத்தமல்லி சாப்பிடுவது எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பது குறித்த போதுமான தகவல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. உயிரை பறிக்கும் ஆபத்தை தடுப்பதற்கு இந்த காலங்களில் கொத்தமல்லி சாப்பிடாமல் இருப்பதே சிறந்தது.