கொரோனா பரவல் தற்போது அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் போட்டியை ரத்து செய்வது குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
சேலம், கோவை, நத்தம், நெல்லை ஆகிய இடங்களில் கடந்த ஜூன் 10-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடக்கவிருந்த போட்டிகள் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக கடந்த மே மாதம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.
இதற்கமைய டி.என்.பி.எல். போட்டியை ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆலோசித்து வந்தது.
இந்நிலையில் கொரோனா பரவல் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தற்போது அதிகமாக இருப்பதால் இந்த மாதத்தில் போட்டியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமில்லை.
மேலும் ஐ.பி.எல். முடிந்ததும், உள்ளூர் ஆட்டமான ரஞ்சி கிரிக்கெட் தொடங்கவுள்ளது இதனால் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு உகந்த காலம் கிடைப்பது கடினமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.