நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பேரும் வரவேற்பை பெற்றது. இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் இப்படம் பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து இப்படத்தை கண்ட நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.
அதை தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் பெயரை சொல்லாமல் இது குறித்து பதிவிட்டு இருந்தார்.
ஆனால் அவர்கள் இருவரும் பேசிய தொலைபேசி ஆடியோ இணையத்தில் வெளியாகி தீயாய் பரவியது.
இந்நிலையில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டர் பதிவில், “வாழ்த்து தெரிவித்த எல்லோருமே ‘என்கிட்டயே தலைவர் பேசுனது மாதிரி அவ்வளவு சந்தோஷம் என்று சொல்றாங்க’ உங்களுடைய அன்புக்கு நன்றி. ஆனால் தனிப்பட்ட முறையில் போன் உரையாடல் லீக் ஆனதில் சந்தோஷம் இல்லை.
ஏனென்றால் அது மிகவும் பெர்சனலான தொலைபேசி உரையாடல்.ஆகையால் தனது ட்வீட்டில் கூட நான் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.
ஆனால் எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. எல்லாம் நன்மைக்கே. மீண்டும் உங்களுடைய அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார்.