இலங்கை பெண்ணான லாஸ்லியா பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். ஆரம்பத்தில் நண்பர்கள், சேரனுடன் அப்பா பாசம் என்று கொண்டாட்டத்துடன் சுற்றிவந்த லாஸ்லியா அதன்பின்னர் காதலில் விழுந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் லாஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் அதிகப்படியான வாய்ப்புகள் காத்திருக்கின்றது என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லாஸ்லியாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. ஜிம்மிற்கு சென்று உடலை மெருகேற்றி வருகிறார் லாஸ்லியா. மேலும், தன்னுடைய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார்.
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, தற்பொழுது ட்ரான்ஸ்பரன்ட் உடை அணிந்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றார். அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்து கூறி இருக்கின்றார். குட்டியான டாப் மற்றும் லாங் ஸ்கர்ட் அணிந்து மெழுகு சிலையாட்டம் இருப்பதாக லாஸ்லியாவின் ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், கவின் ரசிகர்களோ அண்ணி நீங்களா இது என்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
View this post on Instagram