பதட்டம் குறைவதற்கு தயிர் சாப்பிடலாமா..?!

ப்ரோபையோடிக் என்று கூறப்படும் தயிர் வகையை உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதாலும் கூட ஒருவரின் மனநிலையானது மேம்படும் என்று ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. நம் குடல் பகுதியில் ஏராளமான மைக்ரோஆர்கானிஸம் இருக்கிறது.

அவை ஒவ்வொன்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. தயிர் போன்ற ப்ரோபையோடிக் உணவுகளை சாப்பிடுவதால் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாடு அதிகரித்து, பதட்டம் போன்றவை குணமாகிறது.

ப்ரோபையோடிக் உணவுகளை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் செயல் இழந்து போகக்கூடும். மனநல நோய்களை சரிசெய்யவும் இவை உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை பொருத்துதான் நம் மனநிலையும் அமையும். நம் உடலில் இருக்கக்கூடிய நுண்ணிய உயிர்களின் செயல்திறனை பொருத்தும் இது மாறுபடும்.

ப்ரோபையோடிக் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதாலும் கூட ஒருவரின் மனநிலையானது மேம்படும் என்று ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. நான் ப்ரொபையோடிக் உணவுகளை சாப்பிடுவதால் சில நேரம் பேதி, வாயில் வறட்சி ஆகியவை ஏற்படும். அதனால் தினசரி தயிர் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.