ஆண்களுக்கு பொதுவாகவே தாடி வளர்ப்பது மிகவும் பிடிக்கும். ஆண்கள் எப்போதும் தாடியை கோதிக் கொண்டே பெண்களை பார்க்கும் பார்வை வசீகரிக்கச் செய்யும் செயலாக இருக்கிறது. இதற்காகவே ஆண்கள் தாடி வளர்க்க முற்படுகின்றனர். சிலருக்கு எந்தவித பராமரிப்புகளுமின்றி தாடி தானாக வளரும். சிலருக்கு மரபணு காரணங்களால் முயன்றுதான் தாடி வளர்க்க வேண்டி இருக்கிறது. அவர்கள் சிரமமின்றி கீழே குறிப்பிட்டவாறு செய்தால் போதும்.
தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய் பொதுவாக தலைக்கு எல்லோரும் பயன்படுத்தும் எண்ணெய்தான். அதனால் அதை உங்கள் தாடிக்கும் தினமும் தடவி வாருங்கள். தேங்காய் எண்ணெயுடன் ரோஸ்மெரி எண்ணெயும் சேர்த்துத் தடவினால் கூடுதல் பலன் உண்டு.
நெல்லிக்காய் எண்ணெய் : நெல்லிக்காய் எண்ணெய் முகத்தில் வளரக் கூடிய முடிகளை தூண்டிவிடும் தன்மைக் கொண்டது. எனவே நெல்லிக்காய் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் காய விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவிவிடுங்கள்.
இலவங்க எண்ணெய் : இலவங்க எண்ணெய் 2 துளி எடுத்துக் கொண்டு அதில் எலுமிச்சை சாறு 1 மேசைக் கரண்டி சேர்த்துக் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். நீங்களே எதிர்பாராத அளவிற்கு தாடி கரு கருவென வளரும்.