சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் மற்றும் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ஆகிய இருபடங்களுக்காகவும் காத்திருக்கிறார். அண்மையில் வெளியான செல்லம்மா பாடல் பலரையும் கவர்ந்தது.
தமிழில் எடுக்கப்பட்ட ரீமேக் படங்கள் பல ஹிட்டாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் போன்ற நடிகர்களே பிரபல நடிகர்களே இதுபோன்ற படங்களில் நடித்துள்ளனர்.
அண்மையில் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பட அல வைகுந்த புரமுலு. இப்படத்தின் புட்ட பொம்மா பாடல் பலரின் ஃபேவரைட் ஆக மாறியது. இப்பாடலுக்கு சினிமா, கிரிக்கெட் பிரபலங்களே நடனமாடி டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டதை மறக்க முடியுமா என்ன.
தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிப் ஆதி இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பொறுத்திருப்போம் அதிகாரப்பூர்வ தகவலுக்காக.