தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாக கடந்த 5 ஆண்டுகளில் முன்னணியில் திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.
நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்திற்கு பிறகு யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.
ஆனால் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்க போகிறார் என தகவல்கள் வெளியாகின.
மேலும் இப்படத்தை தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது 66வது படத்தை தளபதி விஜய் ஒப்படைத்துள்ளார் என சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் பாக்கியராஜ் அளித்த பேட்டியில் கூறுகையில் : விஜய்யுடன் நான் பண்ணுவதாக இருந்தது, script எல்லாம் கூட ரெடி பண்ணியாச்சு.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்பாராத விதமாக அந்த படம் நடக்காமல் போனது என கூறியுள்ளார்
மேலும் இந்த தகவல் தற்போது தளபதியின் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.