வேலையை இழந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியை சேர்ந்த பிரியா ஜூனேஜா பல்வேறு சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகப் பணியாற்றியுள்ளார்.
லாக்டவுன் காரணமாக வேலையை இவர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.