பிரபல நடிகருடன் பிக்பாஸ்-4 ஷூட்டிங் ஆரம்பமானதா? இணையத்தில் கசிந்த புகைப்படம்

நடிகர் நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

குறித்த புகைப்படம் இணையத்தில் பிக்பாஸ்-4 நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட் சூட் உடையில் ஷூட்டிங்கில் இருக்கும் தனது புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பிக்பாஸ் சீசன் 4-க்கான ப்ரொமோ ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது எனவும் ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கியிருக்கின்றனர்.

அப்போது சீக்கிரமே தமிழுக்கான அறிவிப்பு வரலாம் என சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.