அஜித் தன் திரைப்பயணத்தில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 28 வருடங்கள்!

தல அஜித் இன்று தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது.

இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது, அதிலும் விஸ்வாசம் வெறித்தனமான வசூலாக பல இடங்களில் அமைந்தது.

அஜித் தன் திரைப்பயணத்தில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 28 வருடங்கள் ஆகிறது, அதை ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும், தங்கள் வாழ்த்துக்களையும் பல சினிமா பிரபலங்கள் அஜித்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

அஜித் இன்று போல் என்றும் உச்சத்தில் இருக்க சினி உலகமும் தன் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறது.