நெருங்கிய நண்பர்களுடன் Video Callல் நடிகர் விஜய் செய்த சேட்டை!

இந்தியாவில் நேற்று பலரும் ஃப்ரெண்ட்ஷிப்டே வாழ்த்துக்களை கூறி கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜய் தனது நண்பர்கள் உடன் இணைந்து Video Callல் பேசி மகிழ்ந்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

திரைப்படங்களில் மட்டுமே மாஸ் காட்சிகளிலும், காமெடி காட்சிகளிலும் கலக்கி வரும் விஜய், வீட்டில் எப்பொழுதும் அமைதியாக இருப்பார்.

அதேபோன்று படப்பிடிப்பு தளங்களிலும் தன்னுடைய காட்சியை நடித்துவிட்டு மற்ற நேரத்தில் மிகவும் அமைதியாக இருப்பார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

நண்பர்களிடம் மட்டுமே தன்னுடைய சேட்டையை காட்டும் தளபதி விஜய், ஃப்ரெண்ட்ஷிப் டேவை முன்னிட்டு தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் Video Callல் பேசி மகிழ்ந்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.