ரஷ்யாவில் போதைக்கு அடிமையாகிய கணவரை உப்பு கண்டம் போட்டு வைத்த மனைவி பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க்கை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் அலெக்சாண்டர் யுஷ்கோ (30). இவரது மனைவி மெரினா குகா (25). இந்த தம்பதியினருக்கு இரண்டு வயது மகன் உள்ளார்.
உக்ரேனிய நகரமான நிஜினில் பிறந்த அலெக்ஸ்சாண்டர், ‘ராப்பர்’ இசை மூலம் ரஷ்யாவில் லட்சக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்ற புகழ்பெற்ற பாடகர் ஆவார்.
இந்நிலையில் ஊரடங்கில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது போதையில் இருந்த கணவரை 2 வயது மகனின் கண் முன்பு கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, உடலை சிறு சிறுதுண்டுகளாக வெட்டியுள்ளார்.
பின்பு சலவை இயந்திரத்தில் போட்டு கழுவி உப்புத் தடவி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து ப்ரிட்ஜில் வைத்துவிட்டு தனது வேலையினை எப்பொழுதும் போல் பார்த்துள்ளார்.
இந்நிலையில் அலெக்ஸ்சாண்டரின் நண்பர்கள் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த பொழுது, ஒரு கட்டத்தில் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர். பொலிசாரின் விசாரணையில் மெரினா குகா மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
பின்பு தீவிர விசாரணையில், கணவரை கொன்று உப்புகண்டமாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்று மெரினாவின் தாய் உடந்தையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.