கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க சென்ற ரசிகர்.! சூப்பர் ஸ்டார் செய்த செயல்..!!

ரசிகர் ஒருவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இடம் அத்துமீறி நடந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. சினிமா பிரபலங்கள் பலரும் வெளியில் செல்லும் பொழுது, அவர்களுக்கு நம் ரசிகர்கள் தேவையான பிரைவசியை கொடுப்பதில்லை. எங்கு சென்றாலும் கட்டிப்பிடித்து போட்டோ எடுப்பது, செல்பி எடுப்பது என்று தொந்தரவு செய்வார்கள்.

மேலும் சிலர் எல்லைமீறி முத்தம் கொடுக்கவும் செல்வார்கள். எவ்வளவுதான் கோபம் வந்த போதும் பிரபலங்களும் நாகரீகம் கருதி சிரித்துக்கொண்டே கடந்து செல்வார்கள். அப்படி அவர்கள் கோபப்பட்டால் இரண்டு நாட்களுக்கு இணையதளத்தில் அவர்கள் வச்சி செய்யப்படுவார்கள். என்னதான் நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்களும் மனிதர்கள்தான்.

அவர்களுக்கும் கோபம் வருவது இயல்பான விஷயம் தானே. தற்போது இணையத்தில் அது போன்ற ஒரு சம்பவம் வைரலாகி வருகின்றது. மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல அங்கே அவருடைய ரசிகர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றுள்ளார்.

ஆனால், தன்னுடைய ஒற்றை கோபப் பார்வையில் மோகன்லால் அந்த ரசிகரை ஓரங்கட்டி விட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ எப்பொழுது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. தற்போது அது வைரலாகி வருகின்றது.