நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். கொரோனா பரவல், ஊரடங்கு ஆகியவற்றால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. நிலைமை சீரான பின் படப்பிடிப்பை தொடரலாம் என ரஜினி கூறிவிட்டார்.
கீர்த்தி சுரேஷ்க்கு தெலுங்கிலும் நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் வந்த சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1978 ல் கமல் ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் படம் ஆண்களை மயக்கி ஆசையில் வீழ்த்தும் பெண்களை குறிவைத்து கொலை செய்து வீட்டுத்தோட்டத்தில் புதைக்கும் சைக்கோ கொலையாளி பற்றிய கதையாக வெளிவந்தது.
இளையராஜா இசையமைப்பில் இப்படத்தில் வந்த நினைவோ ஒரு பறவை, இந்த மின்மினிக்கு ஆகிய பாடல்கள் ஹிட்டாகின.
இப்படத்தை இயக்குனர் பாரதி ராஜாவின் மகன் மனோஜ் இயக்குவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் பாரதி ராஜாவே இயக்கவுள்ளாராம். பெண்களை ஆசையில் வீழ்த்தி ஏமாற்றும் ஆண்களை மையமாக குறிவைத்து ஒரு பெண் பழி தீர்ப்பது போல கதாநாயகியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படவுள்ளதாம்.
மேலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.