கரண்ட் பில் ரூ 2 லட்சம்! அதிர்ச்சியான பிரபல பாடகி – மின்வாரியத்தின் மீது புகார்..!!

கொரோனாவால் இதுவரை 1.87 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.04 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவிலும் 39 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். ஊரடங்கு, பொது முடக்கம் என பலவற்றால் பொருளாதாராம் சரிந்துள்ளது. பலரும் வேலையை இழந்து வறுமை நிலைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பலரின் வீடுகளில் மின் கட்டணம் இதுவரை இல்லாதளவில் மிக அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகளும், புகார்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் மும்பை லோனாவாலா வீட்டில் தற்போது ரூ 2 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளதாம்.

இதுவரை ரூ 8 ஆயிரம் அல்லது 9 ஆயிரம் என மட்டுமே வந்த மின்கட்டணம் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல மடங்கு உயர்ந்திருப்பது குறித்து மின்வாரியத்தின் மீது புகார் அளித்தார்.

இதனால் வீட்டிற்கு வந்து சோதனையிட்ட மின் துறை அதிகாரிகள் ஆஷாவின் வீட்டில் ஏதோ ஓரிடத்தில் மின்கசிவு இருக்கிறது. அதுவே மின் கட்டணம் உயர காரணம் என கூறியுள்ளனர்.