வித்தியாசமான தோற்றத்தில் பிரபல நடிகை சுகன்யா!

புது நெல்லு புது நாத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. விஜய காந்த், பிரபு என பல டாப் ஹீரோக்களுடன் நடித்து உச்சத்தில் இருந்தவர்.

தற்போது தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

பல வருடகாலமாக இந்து சமய பக்தர்களால் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு பணிகள் இன்று நடைபெற்றன. பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டனர்.

இந்நிலையில் நடிகை சுகன்யா தன் பக்தியை வெளிப்படுத்தும் பொருட்டு தன் நெற்றியில் ராமரின் திருவுருவத்தை பொட்டாக வரைந்து வைத்துள்ளார்.

இவரின் இந்த போட்டோ சமூக வலைதளத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.