தலைமறைவான சுஷாந்த் காதலி..!!

சுஷாந்த் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுஷாந்த் காதலி ரியா சக்ரவர்த்தி தங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று பீகார் காவல்துறை டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும், மும்பை காவல்துறையுடன் கூட அவர் தொடர்பில் இருப்பதாக்க எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் இருக்கும் தன்னுடைய குடியிருப்பில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட சுஷாந்த் சிங்கின் தந்தை, கடந்த ஜூலை 25ம் தேதி நடிகை ரியா மீது பாட்னாவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் சில நாட்களாக ரியாவை காணவில்லை என கூறப்படுகிறது.

தற்கொலைக்கு தூண்டியதாக ரியா மீது குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து நள்ளிரவில் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தனது கட்டிடத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஜூலை 31 அன்று, ரியா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.