அமெரிக்காவின் பிரபல டிஸ்னி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரோனி ஹாக். 20 வயதே ஆன இளம் நடிகை ஹாக் ’ரேச்சல் டையஸ் என்ற நிகழ்ச்சியில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமாகி ரசிகர்கள் பலரை கவர்ந்தார்.
ஹாக் காதலித்து வந்த இளைஞர் கடந்த ஜுலை 31ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் போலிசாருக்கு போன் செய்து தன்னை உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார்.
இதையறிந்து போலிசார் ரோனியை கைது செய்து இருவரையும் விசாரித்துள்ளனர். அதில் காதலன் போலிசாரிடன் உடலில் இருக்கும் காயங்களை காமித்து என்னை இப்படி அடித்து துன்புறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
காயங்களை கண்டு போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து 1 லட்சம் அமெரிக்க டாலரை கொண்டு ஜாமினில் வெளிவந்துள்ளார் ரோனி ஹாக்.