பொதுத் தேர்தல் இறுதி முடிவு! நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்

2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக வெற்றியை பதிவ செய்துள்ளது.

அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், ஆசனங்களின் விபரங்களும் வெளியாகி உள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – SLPP – 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – SJB – 2,771,984 (23.90%) 54 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – NPP / JJB – 4,45,958 (3.84%) 3 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி – ITAK – 3,27,168 (2.82%) 10 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி – UNP – 249,435 (2.15%) 1 ஆசனம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – AITC – 67,766 (0.58%) – 2 ஆசனங்கள்

OPPP – 67,758 (0.58%) – 1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – TMVP – 67,692 (0.58%) 1 ஆசனம்

இலங்கை சுதந்திர கட்சி – SLFP 66,579 (0.57%) 1 ஆசனம்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – EPDP – 61,464 (0.53%) 2 ஆசனங்கள்

MNA – 55,981 (0.48%) 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – TMTK – (0.44) 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ACMC (0.37%) 1 ஆசனம்

தேசிய காங்கிரஸ் – NC – 39,272 (0.34%) 1 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – SLMC – 34,428 (0.3%) 1 ஆசனம்

இந்த தேர்தல் முடிவுகளுக்கு அமைய பெரும்பான்மை பலத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதுடன், சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.