‘உனக்கு விஜய் கேக்குதா? நானே போதும்..’ மீராமிதுனை நாரநாராக கிழித்து, எச்சரித்த சனம் ஷெட்டி.!

சமீபகாலமாக பிக்பாஸ் நடிகை மீரா மிதுன் ரஜினி, விஜய், சூர்யா என்று பலரையும் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்து வருகின்றார். இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “உங்களுக்கு தானாசேர்ந்தகூட்டம் படத்தில் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்த சூர்யாவிற்கு நடிப்பு திறமை இல்லை என்று கூறுகிறீர்கள். அவர்கள் குறித்து பேசுவதற்கு நீங்கள் யார்? சூர்யா-ஜோதிகா இருவரும் பிரபல தன்மைக்கு ஆசைப்பட்டு கருத்து கூறுகிறார்கள் என்று குற்றம் சாட்ட உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?.

அவர்கள் எவ்வளவு பேருக்கு உதவி வருகின்றனர் தெரியுமா? மேலும், தமிழ் நடிகர் விஜய் குறித்து பேசுகிறீர்கள். உங்களுடைய குற்றச்சாட்டு நெப்போட்டிசம். விஜய் சினிமா துறையில் நுழைய அவரது தந்தை காரணமாக இருக்கலாம். ஆனால், பல லட்சம் ரசிகர்களை பெறவும், நிலைத்து நிற்கவும் நடிகர் விஜயின் உழைப்பு அவசியம். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு அவர் வந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா.?

மிக எளிமையாக விமர்சனம் செய்து மறைமுக பிரபல தன்மையை தேடுகிறீர்கள். இது நீடிக்காது, இதற்கான விளைவுகளை விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். உங்களுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் தேவை இல்லை, நானே போதும். உங்களுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.” என்று ஆவேசமாக பேசி இருக்கின்றார்.