நீரிழிவு நோயாளிகள் இந்த பச்சை ஜூஸை குடித்தால் என்ன நடக்கும்?

இன்று ஏராளமான மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காண்பிக்கின்றனர். ஏனெனில் தற்போது பல்வேறு உடல்நல பிரச்சனைகள் பலரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

இதைக் காணும் போது ஒவ்வொருவரும் தனக்கு எந்த ஒரு நோயும் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.

குறிப்பாக தற்போது பலர் தங்களது உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வைத்தியங்களை நாடுகின்றனர். மேலும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்ற முனைகின்றனர். அதில் ஒன்றாக பலரும் நினைத்து பின்பற்றி வருவது காலையில் எழுந்ததும் ஏதேனும் ஒரு ஜூஸைக் குடிப்பது.

எந்த பானம் யார் குடித்தால் ஆரோக்கியம் என்று பார்க்கலாம்
பாகற்காய் ஜூஸ்

இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுன் வைக்கும்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுவதில்லை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தான் பயன்படுகிறது. குறிப்பாக கற்றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறையவும் உதவும்.

பாகற்காய் ஜூஸ்

இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுன் வைக்கும்.