சீன நிறுவனமான சியோமி தனது 10ஆம் ஆண்டு தொடக்க விழாவை நாளை கொண்டாடுகிறது. இதையொட்டி ‘எம்.ஐ 10 அல்ட்ரா’ என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ‘ரெட்மி கே30 அல்ட்ரா’ மற்றொரு புதிய ஸ்மார்ட்போனையும் நாளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. நாளை சீனாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் என இரண்டு ரகத்தில் இந்த போன் வெளியாகிறது. ரகத்திற்கு ஏற்ப விலையில் மாறுபாடு இருக்கும். பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய 3 நிறங்களில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது.
டிஸ்ப்ளே – 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி
பிராசெஸர் : மீடியாடெக் டிமென்சிடி 1000+ பிராசெஸர்
கேமரா : 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 20 எம்பி செல்ஃபி கேமரா
பேட்டரி : 4400 எம்ஏஹெச் திறன் (33 வாட் விரைவு சார்ஜ் கொண்டது)