தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால். ஆனால் இவர் நடித்த முதல் திரைப்படம் சொல்லும்படி பிரபலமாகவில்லை.
இதையடுத்து அவர் நடித்த திரைப்படம் தான் மைனா. இயக்குநர் விஜய்யுடனான விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலாபால் சினிமா துறையில் பிசியான நடிகையாகிவிட்டார்.
கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆடை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.இப்படத்தை அடுத்து அவர் கைவசம் 5 படங்கள் இருக்கிறது.
தற்போது அமலாபால் நடித்துள்ள ‘அதோ அந்த பறவைப்போல’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளது. ‘அதோ அந்த பறவைப்போல’ திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது.
சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில்தாறுமாறாக கிழிந்த ட்ரவுசரை மாட்டிக்கொண்டு “மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்வதை நிறுத்தி விட்டு, என்னுடைய மனதில் எனக்காக ஒரு இடத்தை உருவாக்கிய போது தான் எனக்கும் என் உடலுக்கு இடையே இருக்கும் இணைப்பை விட வேறு எதுவும் பெரிதல்ல என்பதை உணர்ந்தேன்.” என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த அமலாபாலின் நண்பரும், பிரபல நடிகருமான நகுல் மேத்தா ” க்யூட்டா இருக்கீங்க.. கொஞ்ச நேரம் கழிச்சு டெலிட் பண்ணிடாதிங்க..” என்று கூறியுள்ளார்.