தேடி வந்த பிக்பாஸ் வாய்ப்பு! நிராகரித்த பிரபல சீரியல் நடிகை!

தமிழில் பிக்பாஸ் சீசன் 4க்கான வேலைகள் தொடங்கிவிட்டத்தாக சொல்லப்படுகிறது. தெலுங்கிலும் நிகழ்ச்சிகான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 டீசர் வெளியானது.

சீசன் 3 ஐ நாகார்ஜூனா மீண்டும் தொகுத்து வழங்குவதாக தெரிகிறது. இந்நிலையில் ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 14க்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் ஹிந்தியில் பல சீரியல்களில் கலக்கி வரும் நடிகை சஹத் பாண்டேவுக்கு பிக்பாஸ் சீசன் 14 ல் கலந்துகொள்ள வாய்ப்பு வந்துள்ளது.

ஆனால் அவர் வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். தற்போது அவர் சீரியலில் முழுவதுமாக கவனம் செலுத்தி வருகிறாராம். 2 வருடங்களுக்கு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் என முடிவு செய்துவிட்டாராம்.