ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை காஃபி குடிப்பீர்கள்?

இந்த காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலரும் காஃபி-க்கு அடிமையாக உள்ளார்கள் என கூறினால் அது மிகையாகாது.

ஆனால், அதிகளவில் காஃபி குடிப்பதால் அது மெல்ல மெல்ல உடல் நலனை பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

அதிலும் தற்போது பலரும் வீட்டில் அலுவலகப் பணி செய்வதால் கணக்கே இல்லாமல் நிறைய காஃபி குடிப்பதாகவும், இதனால் வேலையை தொடர்ந்து செய்ய ரெஃப்ரெஷாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

காஃபியை அளவாக எடுத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது.

எனவே ஒருநாளைக்கு 100 மில்லிகிராம் அளவில்தான் காஃபி அருந்த வேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு ஒரு நாளைக்கு 6 கப் அதற்கு மேல் என குடித்தால் 22% மாரடைப்பு, இதய பாதிப்புகள் உண்டாகும் என Americal Journal of Clinical Nutrition இதழ் வெளியிட்டுள்ளது.

ஏனெனில் அதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது, உடல் வலி நிவாரணி, மன அழுத்தத்தை போக்கும். எனவே ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 காஃபி போதுமானது.