கடந்த 7-ம் திகதி வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ் 1344 விமானம் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விமான விபத்து சார்ந்து பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. கேரளா விமான விபத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அனுமானங்கள் அடிப்படையில் சிமுலேட் செய்யப்பட்டது இந்த வைரல் வீடியோ.
இந்த வீடியோ முழு பதிப்பு யூடியூபில் ஆகஸ்ட் 8 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இது விமான விபத்து நடைபெற்ற மறுதினம் ஆகும். வைரல் வீடியோ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 1344 விபத்தின் உண்மை விவரம் எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மையில் இந்த வீடியோ விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை விளக்கும் வகையில் கிராஃபிக்ஸ் காட்சிகளால் சித்தரிக்கப்பட்ட மாதிரி காட்சிகள் ஆகும்.