ஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
iPhone 12 எனும் பெயருடன் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசிகள் 5G இணைய வலையமைப்பு தொழில்நுட்பத்தினைக் கொண்டிருக்கும் என ஏற்கணவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இக் கைப்பேசியில் 4 வகையான மொடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இப்படியிருக்கையில் 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட iPhone 12 கைப்பேசியினையும் ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
5G கைப்பேசிகளை விடவும் 4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகள் பொதுவாக விலை குறைாவக இருக்கும்.
இதன் காரணமாகவே இவ்வாறானதொரு திட்டத்தினை ஆப்பிள் நிறுவனம் கொண்டிருக்கின்றது.
இதேவேளை இக் கைப்பேசிகளின் விலையானது 800 டொலர்கள் முதல் 999 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.