2 கிராம்பு சாப்பிட்டா எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்..!!

நீங்கள் வெறும் வயிற்றில் தேநீர் அல்லது உணவு சாப்பிடும் போது உங்கள் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறமாதிரி ஒரு உணர்வு ஏற்படும். இது மேலும் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி ஏற்படுத்தி விடும். நாம் எல்லோரும் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த பிரச்சினையை சந்தித்து தான் வருகிறோம்.

வயிற்றுப் பொருமல்

  • காரமான உணவுகளை உட்கொள்வது, ஒழுங்கற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், குறைந்த உடல் அசைவு மற்றும் மது அருந்துவது போன்றவற்றால் அசிடிட்டி ஏற்பட்டுவிடும்.
  • பித்தநீர் உங்கள் உணவு குழாயில் பாய்கின்ற எரிச்சல் மற்றும் வலியை உண்டாக்கும். மோசமான வலிகளுக்கு நிவாரணம் இருப்பினும் சில இயற்கை பொருட்களான துளசி இலைகள், இலவங்கப்பட்டை, மோர், ஆப்பிள் சிடர் வினிகர், சீரகம் மற்றும் கிராம்பு உள்ளிட்டவை உடனடி நிவாரணம் அளிக்கும்.
  • இந்த அருமையான இயற்கை வைத்திய பட்டியலில், கிராம்பு தான் (லவங்கம்) முதலிடம் வகிக்கும்.

என்ன நடக்கிறது?

  • நாம் சாப்பிடும் உணவு உணவுக்குழாய் வழியாக வயிற்றுப்பகுதிக்கு செல்லும். வயிற்றில் உள்ள இரைப்பை சுரப்பிகள் உணவை ஜீரணிக்க தேவையான அமிலத்தை/ அசிடிட்டியை உருவாக்கும்.
  • இரைப்பை செரிமானத்திற்குத் தேவையானதை விட அதிகமான அமிலத்தை உற்பத்தி செய்யும் போது அமிலத்தன்மை ஏற்படுகிறது. மேல் வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.
  • இந்த நிலை இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் அடிக்கடி எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

அறிகுறிகள்

கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் அது வயிற்றுப் பொருமல் என்பதைப் புரிந்து கொண்டு, உடனே 2 கிராம்பை எடுத்து வாயில போட்டுக்கோங்க.

  • 2 கிராம் சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் குறையும்
  • கெட்ட சுவாசம் கட்டுப்படும்.
  • அஜீரணம் ஏற்படாமல் தடுக்கும்.
  • வாயில் நீடித்த புளிப்பு சுவை குணமாகும்.
  • கிராம் சாப்பிட்டால் குமட்டல் கட்டுப்படும்.
  • மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.