ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், இதில் டோனியின் பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர் வரும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெறவுள்ளது. இதற்கு இந்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து வீரர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு அணியின் வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
அதன் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான டோனிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
பயிற்சிக்காக டோனி சென்னைக்கு வருவதற்கு முன்பு செய்த பரிசோதனையில் டோனிக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டோனியின் ரசிகர்கள் இனி ஆட்டம் ஆரம்பம் என்று மகிழ்ச்சியாக கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், சென்னையில் பயிற்சிக்காக டோனி நாளை வரவுள்ளதாகவும், அதற்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவுயிலே இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை வந்து தரையிரங்கியவுடன் வீரர்களுக்கு இங்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.