நடிகர் விஜயையும் அவரது படத்தையும் பார்க்காமலே போகிறேன் என பதிவிட்டு ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் விஜய் குறித்து மீரா மிதுன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், ரசிகர்களின் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் விஜய் குறித்து பதிவிட்ட கையோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலா என்ற விஜயின் ரசிகர் டிவிட்டரில் தலைவன் படம் பார்க்காமலே போகிறேன் என்றும் தலைவனையும் பார்க்காமலே போகிறேன் என்றும் கண்ணீர் விடும் ஈமோஜியுடன் பதிவிட்டுள்ளார். தனக்கு காதல் தோல்வி இல்லை என்றும் குடும்ப பிரச்சினை என்றும் தன்னை எல்லோரும் வெறுக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்
இதுகுறித்து மீரா மிதுன் சர்ச்சை கருத்து ஒன்றினையும் பதிவிட்டுள்ளார். அதில்,நடிகர்களை திரையில் மட்டும் கொண்டாடுங்கள்.
அதை விட்டுவிட்டு 24 மணி நேரமும் நடிகர்களை பற்றி கோஷமிட்டு கொண்டிருந்தால் உங்களின் குடும்பமே உங்களை வெறுக்கும். இப்போது உங்களின் விஜயா வந்து உங்கள் குடும்பத்திற்கு சாப்பாடு போடப் போகிறார் என்று கூறியுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் பயங்கர கடுப்பில் பதில் அளித்து வருகின்றனர்.
Celebrate any celebrity on-screen only and offscreen you need to take care of ur family instead of that if your chanting a celebrity name 24/7, family ll dislike yu only. Is @actorvijay going to feed ur family now , Anyways #RipBala https://t.co/k4iRhBQPM4
— Meera Mitun (@meera_mitun) August 13, 2020