வேர்க்கிழங்கு வகை காய்கறிகளில் மிக முக்கியமான ஒரு காய் தான் இந்த முள்ளங்கி.
இது உடம்பில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கின்ற மருத்துவ குணங்களை முள்ளங்கி உள்ளடக்கி இருக்கிறது. குறிப்பாக நீரிழிவு, கல்லீரல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் உண்டாகும் மஞ்சள் காமாலை ஆகிய பிரச்சினையைத் தீர்க்க வல்லது தான் இந்த முள்ளங்கி.
எனினும், ஒரு சிலர் இதனை சாப்பிடுவதால் ஆபத்துக்களும் ஏற்படுகின்றது.
கர்ப்ப காலத்தில் பல உணவுகள் பாதுகாப்பற்றதாகவும் அபாயத்தை விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. முள்ளங்கி பற்றி நீங்கள் இது வரை அறிந்து கொள்ளாத செய்திகளை இப்போது அறிந்து கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் முள்ளங்கி உட்கொள்வதால் உண்டாகும் அபாயம் நேரடியாக இருப்பதில்லை. ஆனால் கர்ப்ப காலத்தில் முள்ளங்கி சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.
எனினும், அதனை அழுக்கைப் போக்காமல் அல்லது சரியாக சமைக்காமல் உட்கொள்வதால் , சால்மோனெல்லோசிஸ், டோக்ஸோபிளாஸ்மோசிஸ் மற்றும் ஷிகெல்லோசிஸ் போன்ற ஆபத்தான நோய்த்தொற்றுகளுக்கு நீங்கள் வாய்ப்புக் கொடுக்கலாம்.
இதனால் அதிக காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, உடல் வலி, மற்றும் கர்ப்ப காலத்தை பாதிக்கக்கூடிய இதர அறிகுறிகள் தோன்றலாம்.
இந்த தொற்று பாதிப்பு தீவிரமாகும் வேளையில் முன்கூட்டிய பிரசவம், கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறப்பது போன்ற பாதிப்புகள் உண்டாகலாம். எனவே ஆரோக்கியமாக சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.