காலைல எழுந்திரிச்சதும் நியூஸ் பேப்பரோட காபியும் உள்ளே இறங்கினா தான் அடுத்த வேலையே ஓடும் என்று இன்றும் நம் வீடுகளில் சொல்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஏன், நமக்கும் கூட தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் காபியோ, டீயோ குடித்தால் தான் அடுத்த வேலை செய்ய மனசும், உடம்பும் ஒத்துழைக்கிறது.
இதுவரையில் பாலுடன், சர்க்கரை சேர்த்துக் குடித்துக் கொண்டு வருகிறோம். காபி, டீ உடலுக்கு நல்லதா, கெட்டதா என்கிற விவாதத்திற்கான பதில் இன்னும் முழுசாக கிடைச்சபாடில்லை. நம் குழந்தைகளுக்காவது இனி, காபி, டீ இல்லாமல் பால் கொடுத்து பழக்கப்படுத்துவோம்.
அப்படி பால் கொடுக்கும் போது சர்க்கரை சேர்க்காமல், அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்த்து கொடுத்தால், சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்க்கும் போது பல நன்மைகள் நம்மை வந்து சேரும்.
பாலில் அதிக அளவிலான கால்சியம் நிறைந்து காணப்படுகின்றன. இது எலும்புகளை அதிகமாக வலிமையாக்குவவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
பாலில் வெல்லம் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்
- குளிர்காலத்தில் இதை தொடர்ந்து குடித்தால் பாக்டீரியாக்கள் நமது உடலை பாதிப்பது குறைந்து விடும்.
- அஜீரண கோளாறால் ஏற்படும் மலச்சிக்கல், குடலியக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய பாலுடன் வெல்லத்தை கலந்து தினமும் குடித்து வந்தால் செரிமான மண்டலத்தின் இயக்கம் சீராகி விடும்.
- வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி மற்றும் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய பாலுடன் வெல்லத்தை கலந்து குடித்தால் சிறப்பான பலன் கிடைத்து விடும்.
- கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இரத்தசோகையை சரி செய்ய இது உதவி செய்யும். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இப்படி நாட்டு சர்க்கரைக் கலந்து குடித்து வந்தால் நல்ல பலனை கொடுக்கும்.
- பாலில் வெல்லத்தை சேர்த்து குடிப்பதன் மூலம் சரும பிரச்சனையை சரி செய்து அழகான மற்றும் பொலிவான சருமத்தை பெற்று விடலாம்.
- இரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவி செய்யும். மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்யவும் இது உதவி செய்யும்.