எங்கிருந்தோ வந்த கொரோனா இங்கிருப்பவர்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. பலரின் வாழ்க்கையில் பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிட்டது.
பொழுதுபோக்கான சினிமா தொழிலை நம்பி வாழ்பவர்களுக்கும் படப்பிடிப்புகள் இல்லாததால் மிகுந்த சிரமம் நிலவுகிறது. நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் சிலர் மாற்று தொழிலில் இறங்கியதும் உண்டு.
அவ்வகையில் தமிழில் சினிமாவில் பல படங்களில் நடித்த சூரிய காந்தை அனைவரும் அறிவார்கள். கார்த்தியுடன் கைதி, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படங்களில் நடித்திருந்தார்.
பாக்யராஜின் தூரல் நின்னு போச்சு படம் மூலம் அறிமுகமான இவர் இன்று போய் நாளை வா, ராசுக்குட்டி ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் வறுமையில் சிக்கி தவிக்கிறாராம். இதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளாராம்.
சாப்பாட்டுக்கு மிகவும் சிரமப்படுவதாக கூறும் அவர் தனக்கு தயவு செய்து உதவி செய்யுமாறு நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.