சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு போன் செய்த தல அஜித்.!!

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினி, அஜித். இவர்கள் இருவருக்குமே உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ரஜினி திரைக்கு வந்து 45 வருடங்கள் வரை ஆகிவிட்டது, இதற்காக பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜித் ரஜினியின் தீவிர ரசிகர், அவரை போல் வரவேண்டும் என்று ரோல்மாடலாக கொண்டு செயல்படுபவர்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கூட ரெடி என்று அஜித் கூறினார்.

தற்போது அஜித் ரஜினிக்கு சமீபத்தில் போன் செய்த்ததாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இதில் இத்தனை வருட சினிமா வாழ்க்கை குறித்து ரஜினியிடம் அஜித் கேட்டு தெரிந்துக்கொண்டதாகவும், அதற்கு நன்றி தெரிவித்ததாகவும் செய்திகள் கிசுகிசுக்கப்படுகிறது.