தமிழ் சினிமாவில் தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் தமிழ் ரசிகர்களை தாண்டி பல மொழி ரசிகர்களை தன்பின் வைத்துள்ளவர் நடிகர் அஜித்குமார். அஜித் படங்கள் சமீபகாலமாக ஆரம்பத்தில் கொடுத்து வந்த ஹிட்டினை கொடுத்து வருகிறார்.
தற்போது லாக்டவுன் என்பதால் வலிமை படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அஜித் எவ்வளவு நல்ல மனிதர் என்று சொல்வது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
யாருக்கேனும் கஷ்டம் என்றால் உதவக்கூடிய பக்குவமும், மனமும் கொண்டவர். இந்நிலையில் அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினியின் தம்பிற்காக கெஞ்சியும் தோல்வியை சந்துள்ளார் அஜித்.
ஷாலினி தம்பியான ரிச்சர்ட் சமீபத்தில் திரெளபதி எனும் படத்தின் மூலம் நடித்து பிரபலமாகியும் சர்ச்சையிலும் சிக்கினார். சில படங்கலிலும் நடித்து வந்த ரிச்சர்ட் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதல் நிச்சயர்தார்த்தம் வரையில் சென்ற நிலையில் இருவருக்கும் சில மனக்கசப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அஜித் தன் மச்சினனின் வாழ்க்கைக்காக அந்த பெண்ணின் குடும்பத்தாரை சந்தித்து பேசியுள்ளார். எவ்வளவோ இறங்கியும் கெஞ்சியும் பேசியுள்ள அஜித்தின் பேச்சை கேட்காமல் இருந்துள்ளார்கள்.
இது பல ஆண்டுகள் ரகசியமாகவே இருந்து தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வருத்தத்தை தந்துள்ளது.