உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிய பிக் பாஸ் நடிகை ரித்விகா..!

பாலா இயக்கத்தில் அத்ரவா நடித்து வெளியான பரதேசி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரித்விகா.

இதன்பின் பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக், கலையரசன் நடித்த மெட்ராஸ் படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

மேலும் இப்படங்களை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி, விக்ரமின் இருமுகன் மற்றும் சில படங்களில் நடித்து வந்தார்.

அந்த சமயத்தில் தான் பிக் பாஸ் வாய்ப்பு தேடி வர, போட்டியாளராக அதில் கலந்து கொண்டார். மேலும் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 2வின் டைட்டிலை வென்றார்.

இதன்பின் தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, யாத்தும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிமாகவும், ஸ்டைலிஷாகவும் மாரியவுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.