நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு! பேரும் வச்சாச்சு! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட புகைப்படம்

கொரோனா ஊரடங்கு இன்னும் நாடு முழுக்க நீடித்து வருகிறது. 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் இறந்துவிட்டனர். தொற்று இன்னும் நீடித்து வருகிறது.

சீரியல், சின்னத்திரை சார்ந்த பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சிலரின் திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தை பிறப்பு ஆகிய சுபவிசேஷங்களும் நடைபெற்றுள்ளன.

தமிழில் வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனிஷா. தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் இவர் தொழிலதிபர் குணா என்பவருடன் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார்.

பின் கர்ப்பமான அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில் அவருக்கு ஆண்குழந்தை பிறந்திருப்பதாக அவரின் தோழியான பிக்பாஸ் பிரவலம் தேஜஸ்வினி பதிவிட்டுள்ளார்.

குழந்தைக்கு ஜேடன் என பெயரும் வைத்திருக்கிறார்களாம்.