இப்படியா வீடியோவ வெளியிடுறது! அதுவும் இந்த நாள்ல – சர்ச்சையில் சிக்கிய அமலா பால்

நடிகை அமலா பால் இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்ததவர். மைனா படம் அவரை அடையாளம் காட்டியது. தெய்வ திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்கள் அவருக்கு முக்கியத்துவத்தை கொடுத்தன.

அவ்வகையில் அவரின் கடைசியாக வெளியான ஆடை படம் அவரின் நடிப்பை பாராட்டவைத்தாலும், படம் வெற்றி பெறவில்லை. அடுத்ததாக அதோ அந்த பறவை போல படம் வெளியாக காத்திருக்கிறது.

மலையாளத்தில் ஆடுஜீவிதம் படத்திலும் நடித்து வந்தார். பாலிவுட் சினிமாவின் முன்னணி பாடகர் ஒருவருடன் காதலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுவந்தது. இருவரின் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின்றன.

இந்நிலையில் இந்த லாக்டவுன் காலத்தில் வெளியிடங்களுக்கு சென்று வருகிறார். சுதந்திர தினத்தன்று நீச்சல் உடையில் கடற்கரையில் தன் நண்பருடன் விளையாடும் வீடியோவை வெளியிட பலரும் விமர்சித்து வருகின்றனர்,