புகைபிடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை அமலா பால், மீண்டும் சர்ச்சை

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல கதாநாயகியாக பிரபலமாக துவங்கினார் நடிகை அமலா பால்.

மேலும் இப்படத்தை தொடர்ந்து சியான் விக்ரமுடன் தெய்வத்திருமகள், தளபதி விஜய்யுடன் தலைவா, தனுஷின் வேலையில்லா பட்டதாரி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

சமீபத்தில் சென்ற வருடம் ரத்தனகுமார் இயக்கத்தில் வெளிவந்த ஆடை திரைப்படம் நடிகை அமலா பாலின் மீது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் சமூக வலைதளங்களில் ஆட்டிவாக இருக்கும் நடிகை அமலா பால், சமீப காலமாக சில ஹாட் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புகைபிடிக்கும் போட்டோவை வெளியிட்டு இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் பதிவிட்டு இருந்தது : “எல்லா நற்பண்புகளும் சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை துணி போல இல்லை, எல்லா கெட்ட பண்புகளும் தலைக்கனமாக இருப்பது இல்லை, அனைத்து புரட்சிகளும் சுவர்களைக் கிழிக்காது, எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை, அனைத்து பாவிகளுக்கும் கைகளில் ரத்தம் இல்லை. என பதிவிட்டுள்ளார்.