குழந்தைகள் பிறந்து வளர்ந்த பின், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அவர்களுக்கு திட உணவுகள் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கப்படும் திட உணவுகள் குழந்தையின் வளர்ச்சியை தூண்டி, முழுமை அடையச் செய்யும் விதமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
ஆனால், இந்தக் காலத்தில் பிறந்து வளரும் குழந்தைகள் வாயை திறந்து பேச ஆரம்பித்தவுடன், நூடுல்ஸ் உணவை ஒரு முறை சுவைத்த பின், இக்குழந்தைகளின் மனதில் ஏற்படும் ஒரே விஷயம் ‘நமக்கு பிடித்த உணவு நூடுல்ஸ்’ என்பது தான்.
ஆரோக்கியம் தரும் இட்லி, ரசம் சாதம், பால் சாதம் போன்ற உணவுகளை குழந்தைகள் வெறுத்து, அவர்கள் விரும்பும் முக்கிய உணவாக மாறி விடுகிறது இந்த நூடுல்ஸ்.
நுடுல்ஸை குழந்தைகள் சாப்பிட்டால் எந்தமாதிரியான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்
பிரசித்தி பெற்ற உணவு
- எப்படியோ எங்கோ தயாரிக்கப்பட்டு அறிமுகமாகிவிட்ட இந்த நூடுல்ஸ் இன்றைய இளைய தலைமுறையினர் முதல் முதுமை பருவத்தினர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக மாறி வருகிறது.
- இதற்கு காரணம் இதை எளிதில் சமைத்து விடலாம், எங்கும் சமைக்கலாம், இதில் கலக்கப்படும் மசாலா சுவையாக கூட நம்மை சாப்பிட தூண்டுவதாக கூட இருக்கலாம். இது போன்ற எண்ணற்ற காரணங்கள் இந்த நூடுல்ஸ் உணவின் வெற்றிக்கு பின் உள்ளது.
பாதுகாப்பானதா இல்லையா?
- இந்த உணவு குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்கள், இதை உண்பவர்கள் என அனைவர்க்கும் பாதுகாப்பானது தானா இல்லையா என்ற பல குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், இதன் விஷத் தன்மையை பல ஆய்வுகள் நிரூபித்து விட்ட நிலையிலும் கூட இந்த உணவின் சுவைக்கு அடிமையாகி இருக்கும் நம் மக்கள் இதன் சுவையில் இருந்து மீள முடியாமல் திண்டாடுகின்றனர்.
- இப்படி தவிப்பில் ஆழ்ந்து இருக்கும் உள்ளங்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்லும் விதமாக இந்த பதிப்பை அர்ப்பணிப்போம்.
நூடுல்ஸ் உணவின் உண்மை தன்மை
- இந்த நூடுல்ஸ் உணவு பல காலமானாலும் கெட்டு போகாமல் இருக்க நூடுல்ஸ் தயாரிப்பு பல நிலைகளுக்கு ஆளாக்கப்படுகிறது. பல தயாரிப்பு நிலைகளில் உள்ளாகும் பொழுது, உணவின் தன்மை மிக மோசமான விஷமாக மாறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.
- இந்த செயல்முறைகளில் நூடுல்ஸ்க்கு அதிகமான சுவை கூட்ட, உணவின் தன்மையை அதிகப்படுத்த, கொழுப்பு சத்திற்கு காரணமான பல பொருட்கள் சேர்க்கப்பட்டு உணவு முற்றிலும் கொடியதாக மாற்றம் அடைய வாய்ப்பு உள்ளன.
உணவின் வடிவம்
- உணவின் வடிவத்தை வாங்குவோரின் அதாவது நுகர்வோரின் கண்ணைக் கவரும் வகையில் வைக்க, நூடுல்ஸ்க்கு வேக்ஸ் கோட்டிங் கொடுக்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது.
- இந்த வேக்ஸ் கோட்டிங் நூடுல்ஸ்க்கு பளபளப்பான வடிவம் கொடுத்தாலும், அதில் எந்தளவு விஷத் தன்மையை சேர்க்கிறது என்பதையும் நாம் எண்ண வேண்டும்.
- மேலும் இதில் நூடுல்ஸை ஈர்ப்பதத்துடன் அதிக நாட்கள் வைக்க, ப்ரொபைலின் கிளைகோல் எனும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இதுவும் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று தான்.
வேதிப்பொருள்களின் கூடாரம்
- நூடுல்ஸ் உணவில் சுவைக்காக சேர்த்து கொடுக்கப்படும் மசாலா பாக்கெட் என்பது முழுக்க முழுக்க கேடு விளைவிக்கும் கெமிக்கல்கள் நிறைந்த கலவையாகும். மோனோ சோடியம் குளுகோமெட், சோடியம், மற்றும் பிற கெமிக்கல்கள் நூடுல்ஸை பதப்படுத்த, ஒரு விதமான புதிய சுவையை ஏற்படுத்த மற்றும் கெடாமல் காப்பதற்காக பயன்படுகின்றன.
ஏற்படும் ஆபத்துகள்
- இந்த நூடுல்ஸை குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பது, உணவில் ஸ்லோ பாய்சன் எனும் நின்று கொல்லும் விஷத்தை கலந்து கொடுப்பதற்கு சமம். இதில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்களும், இதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் தயாரிப்பு நிலைகளும் உணவை முழு விஷமாக மாற்றி தான் உருவாக்கும்.
- இப்படிப்பட்ட விஷத்தை உணவாக உட்கொள்வதால் குழந்தைகளில் குண்டாதல், உப்புச்சத்து, உடலின் பாகங்களில் பிரச்சினைகள், கேன்சர், இரத்தம் மற்றும் இருதய பாதிப்பு போன்ற பல உடல் குறைபாடுகள் உயிரையே கொண்டு போகக் கூடிய அளவிற்கு ஏற்படும்.
புற்றுநோய்க்கு வாய்ப்பு
- நூடுல்ஸ் உணவை தொடர்ந்து, அதிகமாக உட்கொண்டு வரும் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் யாராயினும் அவர்களுக்கு கட்டாயம் புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதில் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.
அடிக்கடி வேண்டாம்
- இந்த விஷத்தன்மை கொண்ட நூடுல்ஸின் சுவைக்கு அடிமையான குழந்தைகளை அதிலிருந்து வெளிக்கொணர இதே உணவை சற்று ஆரோக்கியமான முறையில் தயாரித்து கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளின் மனதை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
- குழந்தைகளுக்கு அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிட அளிக்காமல் என்றாவது ஒரு நாள் என்று அளிக்க வேண்டும். அப்படி அளிக்கும் பொழுதும் மிகக்குறைவான அளவு நூடுல்ஸை அவர்கள் உட்கொள்ளுமாறு பார்த்துக் கொள்ளலாம்.