இந்த ஜூஸ் குடிச்சா நன்மைகள் ஏராளம்?

இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படும்.

உங்களுக்கு இஞ்சியின் துண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட பிடிக்காது என்றால், அதனை ஜூஸ் போன்று செய்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் பெறலாம். இங்கு இஞ்சி ஜூஸை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்.

இஞ்சி ஜூஸ்

இஞ்சியை சுத்தமாக நீரில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி, பாதி எலுமிச்சை சாறு மற்று தேவையான அளவு தேன் கலந்தால், இஞ்சி ஜூஸ் ரெடி.

சர்க்கரை நோய் அகற்ற

இஞ்சியில் உள்ள ஆன்டி-டயாபடிக் தன்மை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவ சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸைப் பருகி வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

மறதி ஏற்படாமல் இருக்க

இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள், நரம்பு மண்டலத்திற்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும். முக்கியமாக இஞ்சி ஜூஸைக் குடித்து வந்தால், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் மேம்பட்டுவிடும். இப்படி புரோட்டீன் அளவு அதிகரித்தால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கும்.

புற்றுநோய்

இஞ்சியில் உள்ள காரமான உட்பொருட்களான ஜின்ஜெரால்கள், பாராடோல்கள், ஷோகோல்கள் மற்றும் ஜின்ஜெரான்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவற்றை அழிக்கவும் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், இஞ்சியை ஜூஸ் செய்து குடித்து வர வேண்டும். குறிப்பாக ஆண்கள் பருகினால், புரோஸ்டேட் புற்றுநோய் கிட்டவே அண்டாது.

கொலஸ்ட்ரால் குறைக்க

இஞ்சி இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியம் பலப்படும்.