SPB-யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து ரஜினிகாந்த் மகிழ்ச்சி!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலில் பாடல்கள் பாடி கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என புகழாரம் சூட்டியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருப்பதாகவும், அவர் பூரண குணம் அடைய இறைவனை வேண்டுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.